• A
  • A
  • A
உதகையில் 8 பேரை பலிவாங்கிய அரசு பேருந்து விபத்து நடந்தது எப்படி?

உதகை: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளளனர். 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து குன்னுாருக்கு புறப்பட்ட அரசு பேருந்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.


உதகையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்தாடா பகுதியிலுள்ள புதுலைன் அருகே நடந்த இந்த சம்பவம் பயணிகளை கிடுகிடுக்க வைத்துள்ளது.

பேருந்தில் பயணித்த 45 பேரில் 8 பேர் பலியாகியுள்ளனர். 18 பேர் உயிருக்கு போராடிய நிலையில் போதிய மருத்துவ வசதி இல்லாமல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். மற்றவர்கள் உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இறந்தவர்கள் பெயர்கள் ஊட்டிநொண்டிமேடு பகுதியை சேர்ந்த ‌நந்தகுமார் (வயது 33), குன்னுாார் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 30), உதனை பேலிதளா பகுதியைசேர்ந்த தர்மன் (வயது 64), ஊட்டி சான்ட்ராக் பகுதியை சேர்ந்த சாந்தகுமாரி (வயது 55 ) பெங்களுரை சேர்ந்த ஜெயஸ்ரீ (வயது 49) ,காந்தல் பகுதியைச்சார்ந்த அல்மஷ்(29) உயிரிழந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காயத்துடன் உயிர் பிழைத்த மாரிமுத்து கூறுகையில்,

பேருந்து மந்தாடா பகுதியிலுள்ள புதுலைன் அருகே வரும்போது தீடீரென ஏதோ சப்தம் கேட்டது. என்வென்று பார்க்கும்போது பேருந்து மரத்தின் மீது மோதி ஸ்டியரிங் திரும்பியுள்ளது. சுமார் பத்து நிமிடம் வலது பக்கமாகவே போய்கொண்டிருந்த வண்டி திருப்பமுடியாமல் கீழே விழுந்தது. பின் கண் விழித்து பார்க்கும்போது பலத்த அடியுடன் அரை மயக்கத்தில் இருந்தோம்.

ஒருவேலை அந்த பகுதி மக்கள் உடனடியாக வந்து காப்பாற்றவில்லை என்றால் மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும், சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகே காவல் துறை மற்றும் அவசர ஊர்தி வந்தது என கூறினார்.

மேலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் அசோகன் கூறியதாவது,

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது, அதில் இரண்டு பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மீதமுள்ளவர்களுக்கு முதுகு தண்டு வடம் மற்றும் கால் பாகங்களில் அடிபட்டுள்ளது, தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக் கொடுப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்