• A
  • A
  • A
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில்: இன்று முதல் முன்பதிவு செய்யலாம்!

ஊட்டி: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது.

கோப்புப்படம்



தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


'நீலகிரி மலை ரயில் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் முயற்சி காரணமாக, இம்மாதம் 31-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே வாரத்தில் இரு நாள்கள் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயிலில், 2 முதல் வகுப்பு பெட்டிகளும், 1 இரண்டாம் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன.

காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு குன்னூரை வந்தடையும். மறு மார்க்கத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தைச் சென்றடையும்.

இதற்கான கட்டணமாக மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு, முதல் வகுப்பில் பெரியவர்களுக்கு ரூ 1,100. 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ 650, இரண்டாம் வகுப்பு- பெரியவர்களுக்கு ரூ 800, சிறியவர்களுக்கு ரூ 500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு 26 முறையுமாகச் சேர்த்து 52 முறை இயக்கப்படுகிறது.

இத்தகைய கோடை சிறப்பு ரயில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் இயக்கப்படுகிறது.

வழக்கமாக இயக்கப்படும் மலை ரயில் சேவையும் தொடர்ந்து இயங்கும். இந்த வழக்கமான மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு பகல் 11.45 மணிக்கு உதகையை வந்தடையும்.

உதகையிலிருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தைச் சென்றடையும்.

வழக்கமான மலை ரயிலில், உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு முதல் வகுப்புக்கு ரூ 205, இரண்டாம் வகுப்புக்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல, குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு முதல் வகுப்புக்கு ரூ 185, இரண்டாம் வகுப்புக்கு ரூ 25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில், ஜூன் 4-ஆம் தேதி வரையிலான உதகை மலை ரயிலில், அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்