• A
  • A
  • A
'ஊழலை ஒழிக்கும் கடமை ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அதிகமாக உண்டு'

நாமக்கல்: ஊழலை ஒழிக்கும் கடமை குடிமகன்களைவிட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அதிகமாக உண்டு என்று சகாயம் ஐஏஎஸ் பேசினார்.



தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி நாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் சகாயத்தின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழாவும் அதனையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து மாலை 3 மணிக்கு வந்த சகாயம் ஐஏஎஸ், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதன்பின்னர் அவர் பேசும் போது, விவசாய நாடான இந்தியா கிராமங்களால் வாழ்கிறது. தற்போது விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளாக நெருக்கடி நிலையில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என இந்தியா இரண்டாக பிரிந்துள்ளது என்றார்.

இதனை அடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சகாயம் ஐஏஎஸ்,

தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் சார்பில் கிராம விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து அவர்களில் இரண்டு பேருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மிகச் சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு விருதுடன் 25 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கான கருத்துரு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டு அதற்கான ஆணை பெறப்பட்டு அனைத்து ஆட்சி தலைவர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஊழலை ஒழிப்பது எவ்வாறு குடிமகன்களின் கடமையோ, அதை விட அதிக அளவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் உண்டு. அவ்வாறு செய்பவர்கள் எல்லாம் சரியானவர்கள் இல்லை என்ற தோற்றம் உள்ளது.

தாய் நாட்டின் மீது பற்றுள்ள அனைவரும் ஊழலை வேறருக்க முன் வரவேண்டும். ஊழலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளோம் என்றும், இதை நீங்கள் அரசியலாகவும் விழிப்புணர்வாகவும் என எப்படி எடுத்து கொண்டாலும் சரி என்றார்.

அதே போல் மதுவின் தீமைகளை எடுத்து சொல்ல எனக்கு எல்லா உரிமையும் உள்ளதென்றும், மதுவின் போதையின் பின்னால் என் சமூகம் செல்லக் கூடாத வகையில் மதுவின் தீமைகளை எடுத்து கூறுவேன் என்று கூறினார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்