• A
  • A
  • A
'ஆண்டாள் மண்' கருத்துக்கு 'தமிழ் மண்' என அமைச்சர் பதிலடி

கோவை: தமிழகம் 'ஆண்டாள் மண்' என்ற பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்துக்கு, இது 'தமிழ் மண்' என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.




அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி,

மின்சாரத் துறை தொழிலாளர்களுடான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சபாநாயகர் தனபால் திறந்து வைத்ததில் பெருமையடைவதாகவும், ஜெயலலிதாவின் படத்தை யார் திறந்தாலும் தவறில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் இவ்விவகாரத்தில் டிடிவி தினகரன் அரசியல் காரணங்களுக்காக தேசிய தலைவர்களை அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாஜக தலைவர்களை அழைத்திருந்தால் தமிழக அரசு பாஜகவின் அடிமையாகி விட்டது எனக் கூறியிருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பொருத்தவரை அதற்கான பணிகள் இந்தியா முழுவதும் மெத்தனமாக சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசுடன் இணைந்து ஸ்மார்ட் சிட்டி பணிகளை வேகமாக செயல்படுத்துவோம்.

தேனி மாவட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தங்க தமிழ்செல்வன் அமைச்சராக வேண்டுமென நாங்கள் ஆசைப்பட்டோம். டிடிவி தினகரன் பின்னால் சென்ற அவருக்கு எங்களை பற்றி பேச தகுதியில்லை.

டிடிவி தினகரன் செல்லும் அனைத்து இடங்களிலும் பணம் கொடுத்து ஆட்களை சேர்த்து கூட்டம் இருப்பது போல காட்டி வருகிறார்.

ஆர்.கே. நகர் மக்களின் வறுமையை பயன்படுத்தி 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஹவாலா முறையில் வெற்றி பெற்றார் எனவும் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

இவர்களைத் தொடர்ந்து பேசிய, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

தமிழ் சமூகத்திற்காக பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தியாகத்தை போற்றும் வகையில் சட்டப் பேரவையில் படம் திறக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டாள் மண் குறித்த பாஜக மாநில தலைவர் சௌந்தரராஜனின் கருத்து குறித்த கேள்விக்கு, இது தமிழ் மண் என பதிலளித்தார்.

மேலும் கருத்து சுதந்திரம் இருப்பதால் யாரும் எந்த கருத்தையும் சொல்வதற்கு தடை இல்லை என்றாலும், அக்கருத்துகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

டிடிவி தினகரனுக்கு கட்சியும் இல்லை, கொடியும் இல்லை. லட்சியமும் இல்லை, தொண்டர்களும் இல்லை.

டிடிவி தினகரன் தமிழக அரசு மீது கற்பனையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் எனவும் தெரிவித்தார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்