• A
  • A
  • A
வரதட்சணை கொடுமை: இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பம்... திடுக் தகவல்!

திருவாரூர்: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவரை அடித்து துன்புறுத்தி கொன்ற கொடூர கணவன், மாமனார், மாமியாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் இளஞ்சேரன். இவரது மனைவி திவ்யா.


திவ்யா கடந்த 17-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் திவ்யா அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து, காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்தனர், பின்னர் திவ்யாவின் கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இக்கொலையானது வரதட்சனை கொடுமையால் நிகழ்த்தப்பட்டது என தெரியவந்துள்ளது.

இச்சூழலில், காவல்துறையினர் திவ்யா கொலை வழக்கில் மேலும் சில ஆசாமிகளுக்கும் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திவ்யா கணவர் உட்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவெடுத்து அவர்களை மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியின் பிரபல வழக்குரைஞர்கள் உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஆனால் நீதிபதி மூன்று பேரையும் 2 நாட்கள் காவல்துறையினரின் காவலில் விசாரிக்க அனுமதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், வழக்கின் திருப்புமுனையாக திடுக்கிடும் சில உண்மைகள் வெளியாகின.

திவ்யா கொலையில் மாமியார் ராணியின் அண்ணனும், திருவாரூர் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் சிவக்குமார் என்பவருக்கும், கரூரைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கொலை நடைபெற்ற அன்று திவ்யா மற்றும் மாமனார் வீட்டில் இருக்க அங்கு உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கரூர் செந்தில்குமார் ஆகியோர் சென்றுள்ளனர்.

அத்துடன் முத்தழகனுடன் சேர்ந்து சிவக்குமாரும், செந்தில்குமாரும் திவ்யாவை கொடூரமாக அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர்.

திவ்யாவை கொலை செய்துவிட்டு மகன் இளஞ்சேரனுக்கு கூடுதல் வரதட்சனையுடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில், மூன்று பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொலை செய்ததாக கூறப்படும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கரூர் செந்தில்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



//



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்