• A
  • A
  • A
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இளம்பெண் மீட்பு! - மூளைச்சலவை செய்ததாக புகார்

தேனி: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த பெரியகுளம் பகுதி மருத்துவர் மற்றும் இளம்பெண் மீட்கப்பட்டுள்ளனர்.



தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இவரின் மகன் மனோஜ்குமார் (30) மதுரை மேலூரில் அரசு மருத்துவராக உள்ளார்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மனோஜ்குமார் மற்றும் அவரது சகோதரி மகள் நிவேதா (17) உடன் திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் சென்று வந்துள்ளார்.

அங்கு நித்தியானந்தாவின் சீடர்கள் இவர்களை மூளைச் சலவை செய்து கட்டாய மணமாற்றத்துடன் ஆசிரமத்திலே தங்க வைத்துள்ளனராம்.

நீண்ட நாட்களாகியும் இருவரும் வீடு திரும்பாததால் இவர்களின் பெற்றோர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்திற்குச் சென்று கேட்டுள்ளனர்.

அங்குள்ள சீடர்கள் நீங்கள் தேடி வந்துள்ள நபர்கள் இங்கு இல்லை என தெரிவித்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

பின் மனோஜ்குமார், நிவேதாவை பெங்களூரில் உள்ள நித்தியானந்தாவின் பிடரி ஆசிரமத்துக்கு கடத்தி சென்று தங்க வைத்துள்ளதாக தெரிகிறது.

மனோஜ்குமாரின் தந்தை காந்தி மற்றும் நிவேதா தந்தை குமார் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தங்களது பிள்ளைகளை மீட்டுத்தர வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் இவர்களை மீட்பதற்கு தனிப்படை காவல் துறையினர் பெங்களூர் விரைந்து இருவரையும் மீட்டு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இன்று ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சமரச பேச்சுவார்த்தை நடைபெற்ற பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்குப் பின் பெற்றோர்களுடன் ஒப்படைக்க உள்ளனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்