• A
  • A
  • A
நெல்லை, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கும் மழை

நெல்லை: காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்துவருகிறது. இதனால் இரு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்



சென்னை வானிலை ஆய்வு மையம், தென் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் நேற்று (செவ்வாய்க்கிழமை) எச்சரிக்கை விடுத்திருந்தது.


இந்நிலையில், குமரி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலை முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது.

மேலும், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

ஆனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளம் மழைநீரால் மூழ்கியதால், அங்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முத்துநகர் விரைவு ரயில் தூத்துக்குடி மேலூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

பாபநாசத்தில் 19 செ.மீ, ரமா பகுதி அணையில் 13 செ.மீ. கடனா அணைப்பகுதியில் 11 செ.மீ, சேர்வலாறு அணைப்பகுதியில் 10 செ.மீ என மழையின் அளவு பதிவாகி உள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்