• A
  • A
  • A
கொடநாடு விவகாரத்துக்கு முதல்வர் பதில் விலக வேண்டும் - அரசியல் தலைவர்கள்

சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் பதில் என்னவென்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



திமுக தலைவர் மு.க ஸ்டாலின்:

இந்தக் குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் நீண்ட கரங்கள் கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் வளைத்துக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

மேலும் தாமதமானால் நீதி மறுக்கப்பட்டு, கொலைகள், கொள்ளை மர்மங்கள் ஆழப் புதைக்கப்பட்டுவிடும்.

திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராஜா:

கொடநாடு கொலை சம்பவம் நடந்தபோது கொடநாட்டில் என்னவெல்லாம் நடந்தது என்பதை விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தான் முதல் குற்றவாளி என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யமுடியும்.

அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன்:



உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்கள் தெய்வமாக மதிக்கும் ஜெயலலிதா மக்கள் பணியில் கால நேரம் பாராது உழைத்தவர். தனக்கு ஓய்வு தேவை என நினைக்கும்போது அவர் விரும்பி சென்றுவந்த இடம் கொடநாடு.

ஆனால் அங்கு கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பாக எந்த விசாரணை அமைப்பு விசாரித்தாலும் அதை கண்காணிக்கும் விதமாக பதவியிலுள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் அந்த விசாரணையை நடத்தவேண்டும். இல்லையேல், நீதிமன்றமே தாமாக முன்வந்து தனது முழு கட்டுப்பாட்டில் இந்த விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

கொடநாடு கொலைகள் மற்றும் கொள்ளைகளுக்கு ஆட்களை ஏவிய குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமையையும் தகுதியையும் இழந்து விட்டார். எனவே உடனடியாக பழனிசாமி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.

தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கும் கொடநாடு கொலைகள், கொள்ளையைக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, தமிழக மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை எக்காரணம் கொண்டும் தப்பிவிட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

இந்தக் குற்றச் சம்பவங்களின் நிழல் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி மீது விழந்துள்ளது. இருப்பினும் அவர் எதுவுமே நடக்காதது போல் அமைதி காத்து வருவது ஆரோக்கிமான செயல் அல்ல.

புதுதில்லி செய்தியாளர்கள் சந்திப்பில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதலமைச்சர் வாய் திறந்து பேச வேண்டும். பொது மக்களிடம் விளக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி பதில்:

அதிமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

நேரடியாக மோத முடியாதவர்கள். இப்படி குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். உண்மை வெளிச்சத்துக்கு வரும். மக்கள் வாக்களித்த பதவியில் அமர்த்திய அதிமுக அரசை கவிழ்க முடியாது என பதிலளித்தார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்