• A
  • A
  • A
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சங்கர் மயிலாப்பூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்



தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியும் ஒன்று. இதனை சங்கர் தேவராஜன் என்பவர் நடத்தி வந்தார்.


இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சங்கர் மகாதேவன் மைலாப்பூர் கிருஷ்ணசாமி அவென்யூவில் வசித்து வந்தார். நேற்று இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே சென்றுள்ளனர்.

அப்போது சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து அவரைக் காண வந்த நண்பர்கள் சங்கர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மைலாப்பூர் காவல் துறையினர் சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குடும்ப பிரச்சனை காரணமாக சங்கர் தற்கொலை செய்து கொண்டார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல்வேறு துறைகளில் அதிகாரிகளை உருவாக்கியுள்ள சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்