• A
  • A
  • A
நாளை கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

சென்னை: தமிழக சட்டப் பேரவை வியாழக்கிழமை (நாளை) கூடுகிறது. இதில் 2018-19 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

கோப்புப்படம்



தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. இதில் 2018-19 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். சட்டப் பேரவை மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.


நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதன் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து உரையாற்றுகிறார்.

இதற்காக பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்று விவாதிக்க வியாழக்கிழமை நண்பகலில் பேரவையின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த அறிக்கையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நதிநீர்ப் பிரச்னையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றும் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் பேரவையில் தமிழக அரசால் கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேரவை கூட்டத் தொடரில் பல புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தின் எதிரொலியாக மலையேற்றத்தை வரைமுறைப்படுத்துதல், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக சட்டத் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியப் பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் குரங்கணி காட்டுத் தீ சம்பவம், ஐ.டி., பெண் ஊழியர் லாவண்யா மீதான தாக்குதல் சம்பவம் போன்ற பல முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்