• A
  • A
  • A
சென்னை சாலைகளில் நீண்டகாலம் கிடக்கும் வாகனங்களை அகற்ற 15 நாள் கெடு

சென்னை: சாலைகள், நடைபாதைகள், தெருக்களில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை, 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.



இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் நேற்று(செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்கள், நடைபாதைகள், தெருக்கள் ஆகியவற்றில் பழுதடைந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதனால், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், இந்த வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.

அவ்வாறு அப்புறப்படுத்தப்படாத வாகனங்களை, வட்டம் வாரியாக இடம் தேர்வு செய்யப்பட்டு, காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த வாகனங்களை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு, ஏலத்தில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்