• A
  • A
  • A
மஸாஜ் மையம் என்ற பெயரில் விபச்சார விடுதி - போலீசார் அதிரடி நடவடிக்கை

மதுரை: மஜாஜ் மையத்தில் வேலை தருவதாகக் கூறி வெளிமாநில பெண்களை அழைத்து வந்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தியது தொடர்பாக பெண் உள்பட மூவரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.



மதுரை அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் மசாஜ் மையத்தில் வெளிமாநில பெண்களை கட்டாயப்படுத்தி பாலியலில் ஈடுபடுத்தி வருவதாக அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மசாஜ் மையத்துக்கு போலீசார் சென்றபோது மையத்தின் உரிமையாளர் பாலா அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.


இதையடுத்து ஊழியர்களான மாடக்குளத்தைச் சேர்ந்த அழகேஸ்வரன் (32), அவருடைய மனைவி பவித்ரா (25), கேரளாவை சேர்ந்த சனூப் (23) ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் மேற்குவங்கம், கேரளத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மசாஜ் மையத்தில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி மதுரைக்கு அழைத்து வந்து பாலியலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் மசாஜ் மையத்தில் இருந்து வெளி மாநில பெண்கள் மூவரையும் மீட்டு அரசுக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். தப்பிச் சென்ற உரிமையாளர் பாலாவை தேடி வருகின்றனர். மேலும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் அட்டை மூலம் பணம் செலுத்த உதவும் ஸ்வைப்பிங் கருவியை பறிமுதல் செய்தனர்.

மேலும் மசாஜ் மையத்துக்கு ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாகவே கட்டணம் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்தி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். இதில் மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் இணைய தளம் மூலம் அறிந்து மசாஜ் மையத்துக்கு வந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து போலீசார் மசாஜ் மையத்துத்துக்கு வந்து செல்பவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுரையில் இயங்கி வரும் மசாஜ் மையங்கள் தொடர்பாகவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்