• A
  • A
  • A
தாயின் கள்ளக்காதல் 7 வயது மகளின் உயிரை பறித்தது

ஈரோடு: தாயின் கள்ளக்காதலால் எந்த தவறும் செய்யாத 7 வயது மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். தனியார் பனியன் உற்பத்தி தொழில்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு மகள் தனிஷ்கா (7), மகன் வினு (5) ஆகியோர் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் கமலகண்ணனன்-வனிதா தம்பதி வசித்து வந்தனர். குன்னூரைச் சேர்ந்த வனிதா, சேலத்தைச் சேர்ந்த கமலகண்ணனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இரண்டு குடும்பமும் அருகருகே குடியிருப்பதால் நெருக்கமாக பழகி வந்தனர்.


இந்நிலையில், கமலக்கண்ணனுக்கும் கனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியுள்ளது. இதையறிந்த வனிதா கணவர் கமல கண்ணனை கண்டித்துள்ளார். எனினும் கனகா உடன் கள்ளக்காதலை கமலக்கண்ணன் தொடர்ந்துள்ளார். கனகாவுக்காக அதிகம் பணம் செலவழித்து வந்துள்ளார். இதனால், வாழ்வினை கெடுத்த கனகாவினை பழிவாங்க வனிதா திட்டமிட்டார்.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி கனகாவின் குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட வனிதா தனிஷ்காவை மட்டும் தனது வீட்டுக்குள் அழைத்து சென்று கழுத்தை நெறித்து கொலை செய்தார். பின்பு தனிஷ்காவின் சடலத்தை தனது வீட்டின் அருகே உள்ள மரத்தின் அடியில் வீசிவிட்டு சென்றார். பின்பு ஒன்றும் அறியாதவர் போல் நடந்து கொண்டார்.

சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள், பெருந்துறை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணத்தில் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணையை நடத்தினர். வனிதாவிடம் விசாரிக்கும்போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில், தனது கணவருடன் வைத்திருந்த கள்ளக்காதலை கைவிட மறுத்த கனகாவினை பழிவாங்குவதற்காக, அவரது 7-வயது மகளை வீட்டுக்குள் அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை மரத்தின் அடியில் வீசி சென்றதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து வனிதாவை போலீஸார் கைது செய்து, பெருந்துறை முதலாவது நீதிமன்ற நீதிபதி ரஹேனாபேகத்தின் முன்பு ஆஜர்படுத்தினர். பின்பு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தாயின் கள்ளக்காதல் உறவால் எந்த தவறும் செய்யாத 7 வயது மகள் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்