• A
  • A
  • A
சபரிமலை சென்று திரும்பிய பெண்ணின் மகளை பள்ளியில் சேர்க்க விடாமல் போராட்டம்!

கோவை: சபரிமலை சென்று திரும்பிய பிந்துவின் மகளை பள்ளியில் சேர்க்க விடாமல் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கேரளாவில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் அகழி பகுதியை சேர்ந்த பிந்து தங்கம் கல்யாணி, 50 வயதை கடக்காத இவர், கடந்த மாதம் சபரி மலைக்கு செல்ல முயன்றபோது அவரை பம்பை பகுதியில் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்யாமல் திரும்பினார். இதனையடுத்து பிந்து ஆசிரியராக பணிபுரியும் பள்ளி மற்றும் அவரது வீட்டுக்கு முன்பாக தொடர்ந்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் சபரிமலை செல்வதற்காக, அவர் மாலை போட்டு உள்ளளர். இந்த சூழலில் கேரளா தமிழக எல்லை பகுதியில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது மகளை சேர்க்க நேற்று வந்த பிந்துவிடம், ஐயப்ப பக்தர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு, அவரது மகளை சேர்க்க கூடாது என கோஷமிட்டனர். இந்நிலையில் விண்ணப்பத்தை அளித்து விட்டு பிந்து வீடு திரும்பினார்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, தற்போது கல்வி ஆண்டு முடியாததால், அவரை பள்ளியில் சேர்க்க முடியாது எனவும், கல்வி ஆண்டு துவங்கும்போது பள்ளியில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

பள்ளியில் சேர்த்துக் கொண்டால் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று ஐயப்ப பக்தர்கள் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்