• A
  • A
  • A
மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சென்னை: டாஸ்மாக் மதுபானங்களை இனி எம்ஆர்பி விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என பார் உரிமையாளர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

கோப்புப்படம்



டாஸ்மாக் மற்றும் அதனை ஒட்டியுள்ள மதுக்கடைகளில் மதுபானங்கள் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.


இந்தப் புகார்களுக்கு டாஸ்மாக் நிறுவனமும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், அதிகமான விலையில் மது விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது.

கோடைகாலம் வந்துவிட்டதால், பீர் அதிகமாக விற்பனையாகும். அதிலும் கூலிங் பீருக்கு செம கிராக்கி ஏற்படும்.

இந்த நிலையில், பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மதுபானங்கள் இனி எம்ஆர்பி (MRP) விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும், அதிகமான தொகை வசூலிக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவு, மதுப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், கோடைகாலத்தில் கூலிங் பீர் எம்ஆர்பி விலைக்கே கிடைக்கும் என குடிமகன்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்