• A
  • A
  • A
அஸ்வினியை நான் தான் படிக்க வைத்தேன் - அழகேசன் வாக்குமூலம்

சென்னை: அஸ்வினி அவளின் தாயின் பேச்சைக் கேட்டது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் அவளை கொன்று விட்டு, நானும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவேடுத்தேன் என்று அழகேசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோப்புப்படம்



சென்னை கே.கே.நகரிலுள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்துவந்த மாணவி அஸ்வினியை இளைஞர் ஒருவர் கல்லூரி வாசலில் வைத்து குத்திக் கொலை செய்தார். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதையடுத்து, மாணவி அஸ்வினியை கொலை செய்த அழகேசனை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அழகேசன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அழகேசனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலீஸார் விசாரணையில் அழகேசன் கூறியது:

என் பெயர் அழகேசன். மதுரவாயலைச் சேர்ந்த நான் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறேன். அஸ்வினியும் நானும், காதலித்து வந்தோம். எங்கள் காதல் விவகாரம் அஸ்வினியின் தாய்க்கு தெரிந்து விட்டது. அஸ்வினிக்கு தந்தை கிடையாது.

என்னுடைய கல்வி தகுதி, அழகு , ஜாதி இவற்றை சுட்டிக்காட்டி அஸ்வினியின் தாய் என்னை ஏற்க மறுத்தார். அதுமட்டுமில்லாமல் என்னைப் பற்றி அஸ்வினியிடம் தவறாக சித்தரிக்க ஆரம்பித்தார்.

இதனால் அஸ்வினி என்னை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தாள். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில், என்னுடைய அவசர குணத்தினால், அஸ்வினிக்கு தாலி கட்டினேன்.

இதனால், என்னை சுத்தமாக அஸ்வினி வெறுத்து விட்டார். அதன் பின்பு, மதுரவாயலில் இருந்தால், என்னை தினமும் பார்க்க நேரிடும் என்று அவளின் உறவினர் வீட்டிற்கு அஸ்வினியை அவளின் அம்மா அனுப்பி விட்டார்.

அங்கு சென்றும் நான் அஸ்வினியிடம் பேச முயற்சித்தேன். இதனால், கோபத்தில் அஸ்வினி என் மீது கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நான் கட்டிய தாலியையும் கழற்றி எரிந்து விட்டார்.

இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருப்பினும், போலீஸாரின் வற்புறுத்ததால், இனிமேல் அஸ்வினியை தொல்லை செய்ய மாட்டேன் என்றும், அவளுக்கும் எனக்குமான உறவு முடிந்து விட்டது என்று என கைப்பட காவல் நிலையத்தில் எழுதி தந்துவிட்டேன்.

ஆனாலும், அஸ்வினியை என்னால் மறக்க முடியவில்லை.

நான் 10 வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். ஆனால், அஸ்வினி பட்டப்படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக பலமுறை என் வீட்டிற்கே தெரியாமல் ரூ. 2 லட்சம் வரை அவளுக்காக கல்லூரியில் ஃபீஸ் கட்டினேன்.

இது எல்லாவற்றையும் மறந்து விட்டு, அஸ்வினி அவளின் தாயின் பேச்சைக் கேட்டது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் அவளை கொன்று விட்டு, நானும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவேடுத்தேன். அதற்குள் பொதுமக்கள் என்னைப் பிடித்து அடித்து விட்டனர்.

இவ்வாறு அழகேசன் கூறியுள்ளார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்