• A
  • A
  • A
திருச்சியில் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசிய விமானம்!

திருச்சி: துபாய் செல்லும் ஏர் இந்திய விமானம், திருச்சியிலிருந்து புறப்படும்போது எதிர்பாராதவிதமாக விமான நிலைய சுற்றுச்சுவர் மீதும், கட்டுப்பாட்டுக் கோபுரம் மீதும் மோதியது. இதில் அதிருஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.



திருச்சி விமானநிலையத்தில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று 130 பயணிகளுடன் துபாய் புறப்பட்டது.


அப்போது விமான நிலையத்திலிருந்து மேலெழும்பும் போது எதிர்பாராத விதமாக விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் அதன் அருகில் அமைந்திருந்த வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் மீது மோதியது.

இதில் சுற்றுச்சுவர் மற்றும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்தது. விமானம் மேலே செல்லும் போது அதன் சக்கரங்கள் விமானத்தினுள் செல்லாமல் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதனை சுதாரித்துக் கொண்ட விமானி உடனடியாக விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பத்திரமாக பறக்கச் செய்தார். இதனால் பயணிகள் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாமல் விமானம் பறந்தது.

இதையடுத்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் ஏதும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக மீண்டும் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் மும்பை சத்திரபதி விமான நிலையத்தில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்