• A
  • A
  • A
கார் மரத்தில் மோதி கொடூர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!

கரூர் : புளியமரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சார்ந்த இரு பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சார்ந்தவர் செல்வராஜ் (65). இவர் ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநராக, பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவரது மனைவி கிரேஸ் ஜெயலட்சுமி ( 55)


இருவரும் அவரது உறவினர் சுப்புலட்சுமியுடன் தாராபுரத்தில் உள்ள கிரேஸ் ஜெயலட்சுமியின் சகோதரியின் வீட்டுக்கு காரில் சென்றுள்ளனர். காரை தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்த முனியாண்டி (63), என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இவர்கள் சென்ற கார் சின்னதாராபுரம் பகுதிக்கு முன்னர் உள்ள நேரு நகர் பேருந்து நிறுத்தத்தின் முன்பு உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன் சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், காரில் சென்றவர்கள் சீட் பெல்ட் அணியாதது தான் இந்த கொடூர விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 4 பேரின் உடல்களும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக போலீசாரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்