• A
  • A
  • A
வெளிநாட்டு தொடரில் மனைவியுடன் தங்க அனுமதி கேட்கும் கோலி- ஐசிசி அதிரடி பதில்!

வெளிநாட்டு சுற்றுப்பயண கிரிக்கெட் தொடர்கள் முடியும்வரை, வீரர்களின் மனைவிகளும் உடன் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார்.



இந்திய அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் தங்களது மனைவி அல்லது காதலி, குடும்பத்தினரை 2 வாரங்கள் வரை மட்டுமே தங்களுடன் தங்கவைத்துக் கொள்ளலாம்.


அதன் பிறகு திருப்பி அவர்களை அனுப்பி விட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் புதிய விதியை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விதியை மாற்றி அமைக்கவேண்டும் என்றும், வெளிநாட்டில் விளையாடும் போது, அந்த தொடர் நிறைவடையும் வரை வீரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் சார்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய கோரிக்கை வைத்துள்ளார்.

இதைப்பற்றி கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தரப்பில் கேட்ட போது, "வெளிநாட்டு பயணத்தின் போது தொடர் முடிவடையும் வரை மனைவியை உடன் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை வைத்துள்ளது உண்மை தான்.

ஆனால் அது குறித்து தற்பொழுது எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு அவர்களின் முடிவுக்கு விட்டுவிடப்போகிறோம். அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறையில் இப்போது எந்த மாற்றமும் இருக்காது" என தெரிவித்தது.

இந்திய அணியின் அடுத்த வெளிநாட்டு பயணம் வருகின்ற, நவம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 20 ஓவர், ஒரு நாள், டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்