• A
  • A
  • A
லக்ஷ்மன், ஓஜா ரசிகர்களுக்கு தந்த தட் ஹார்ட் பிரேக்கிங் மொமண்ட் !

2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதல் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று இன்றோடு 8 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நன்றி: பிசிசிஐ டுவிட்டர் பக்கம்கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டைவிட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள்.

அதற்கு காரணம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பது இவர்களது கருத்து. ஆனால், உண்மையான கிரிக்கெட் ரசிகர்களை கேட்டால் ஒருநாள் , டி20 போட்டிகளைவிட டெஸ்ட் கிரிக்கெட் தான் மிகவும் சுவரஸ்யமான போட்டி என்பார்கள்.

பல சமயங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த ஹார்ட் பிரேக்கிங் மொமண்ட் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர், இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா என பல தொடர்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

அந்த வகையில், 8 வருடங்களுக்கு முன்பு ஓர் போட்டி ஒட்டுமொத்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய படபடப்பை ஏற்படுத்தியது.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் அக்டோபர் 1 முதல் 5 வரை நடைபெற்றது. இதில், ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 428 ரன்களை அடித்தது. வாட்சன் 126 ரன்களை விளாசுகிறார். இந்திய தரப்பில் ஜாகிர் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 405 ரன்களை எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் நெர்வஸ் 98 ரன்களில் ஆவுட் ஆகிறார். இந்த இன்னிங்ஸின் போது இந்திய வீரர் லக்ஷ்மனிற்கு தசை பிடிப்பு ஏற்பட்டதால், 10வது வீரராக களமிறங்கினார்.

இதன் பின் 23 ரன் முன்னிலையுடன் ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. அவர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் ஜாகிர் கான், இஷாந்த ஷர்மா,ஹர்பஜன் சிங் மற்றும் நமன் ஓஜா ஆகியோர் 192 ரன்களுக்கு சுருட்டினர்.

இதனால், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 216 ரன்கள் தேவைப் படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸில் 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்வது சற்று கடினம் தான்.

சேவாக், கம்பீர், டிராவிட், சச்சின், ரெய்னா, தோனி, லகஷ்மன் போன்ற 90'ஸ் கிட்ஸ் களின் ஃபேவரட் பிளயர் அணியில் இருக்கிறார்கள், இது மட்டுமில்லமால் சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதால், இந்தியா எளிதில் வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், எதிரணி ஆஸி ஆச்சே பாஸ், அவ்வளவு ஈஸியா ஜெயிக்க விட்டுருவாங்களா என்பது போல் இந்தியாவிற்கு டஃப் கொடுத்தனர். 90'ஸ் கிட்ஸ் களின் ஃபேவரட் பிளயர்ஸ் கம்பீர் டக், சேவாக் 17, டிராவிட் 13, சச்சின் 38, ரெய்னா டக், தோனி 2, ஜாகிர் கான் 10, ஹர்பஜன் சிங் 2 ஆகிய ரன்களில் ஆஸியின் சிறப்பான பந்துவீச்சினால் வெளியேற்றபட்டனர்.இந்தியாவின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்னாக உள்ளது. இந்த தருணத்தில் நான்காவது இன்னிங்ஸின் நம்பிக்கை வீரர் லக்ஷ்மன், பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுடன் 9 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார். இந்திய அணிக்கு வெற்றிபெற 92 ரன்கள் தேவைபடுகிறது.

இந்த கட்டத்தில், இந்தியா தோல்விடைந்து விடும் என இந்திய ரசிகர்களே நினைத்தனர். இந்த தருணத்தில் லகஷ்மன் தசை பிடிப்பு காரணத்தால், சுரேஷ் ரெய்னாவை பை ரன்னர் வைத்துக்கொண்டு ஆடினார்.

தோல்வி என நினைத்த இந்திய ரசிகர்களுக்கு லக்ஷ்மன் மற்றும் இஷாந்த் ஆஸியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை விளாசி தள்ளினர். இவ்விரு வீரர்களும் 9 வது விக்கெட்டுக்கு 81 ரன்களை சேர்த்தனர்.

வெற்றிபெற 11 ரன்களை தேவைபடும் போது மீண்டும் களத்தில் ஒரு பதற்றம் ஏற்படுகிறது. இஷாந்த் ஷ்ரமா ஆவுட் ஆகிறார். சூழ்நிலை இன்னும் பதற்றமடைகிறது. இரு அணிகளும் வெற்றிக்கு போராடுகிறார்கள்.

இந்த இக்கெட்டான நிலைமையிலும் லக்ஷ்மன், 11வது வீரர் ஓஜாவை வைத்துகொண்டு எப்படியோ 11 ரன்களை அடித்து இந்திய அணியை த்ரில் வெற்றிபெற செய்தார்.

அந்த 11 ரன்கள் எடுப்பதற்குள் லக்ஷ்மன் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அதிமாக டென்ஷன் அடைந்தார்கள்.

ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுகிறார்கள். இந்த போட்டியில் லக்ஷ்மன் 79 பந்துகளில் 73 ரன்களை விளாசி ஆஸியின் மோஸ்ட் வான்டட் வில்லனாக மாறினார்.

இந்த போட்டி இன்றளவும் 90'ஸ் கிட்ஸ்களால் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துள்ளது. ஒருநாள், டி20 மட்டுமல்ல டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும் என இந்த போட்டி ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டியது.

CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்