• A
  • A
  • A
டெல்லி விக்கெட்டுகள் காலி; மேக்ஸ்வெல் அதிரடியில் நம்பிக்கை

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் 201 ரன்களை விரட்டி விளையாடி வரும் டெல்லி அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது.

கோப்புப்படம்



ஐபிஎல் இல் இன்று(திங்கள்கிழமை) நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

அந்த அணியின் டாப் ஆர்டர் வரிசையாக பெவிலியனுக்கு நடையைக் கட்டியது. ராய் 1, ஷ்ரேயாஸ் 4, கம்பீர் 8 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால், அந்த அணி தொடக்கத்தில் திணறியது.

ஆனால், விக்கெட்டுகள் சரிந்த போதும் மனம் தளராத ரிஷப் பாண்ட் அதிரடியில் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை மிரட்டினார். இதனால், அந்த அணியின் ரன ரேட் மேல் நோக்கி இருந்தது. பவர்பிளே ஆன முதல் 6 ஓவரில் அந்த அணி 56 ரன்கள் எடுத்தது.

மேக்ஸ்வெல்லும் பாண்ட் அதிரடிக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பாண்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, மேக்ஸ்வெல் அதிரடி பொறுப்பை ஏற்று விளையாடி வருகிறார்.

டெல்லி அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

மேக்ஸ்வெல் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்