• A
  • A
  • A
ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனதை தொடர்ந்து, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.



இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் இரண்டாம் தேதி தொடங்கியது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது. இதனை தொடர்ந்து, களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 300 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது.

இந்நிலையில் முதல் இன்னிங்க்ஸ் நிறைவடைந்ததை அடுத்து இந்தியாவை விட 322 ரன்கள் பின்தங்கியிருந்த ஆஸ்திரேலியா அணிக்கு, கேப்டன் விராட் கோலி பாலோஆன் கொடுத்தார். சொந்த மண்ணில் 31 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி பாலோஆன் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி ஆறு ரன்கள் எடுத்திருந்த போது, நான்காம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையால் தடைப்பட்டது.

மழை காரணமாக ஐந்தாம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், போதிய வெளிச்சமின்மை காரணமாலும் இந்த டெஸ்ட் போட்டி டிராவானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையை படைத்தது.

இதற்கு முன்பு எந்தவொரு ஆசிய அணியும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணி புதிய சகாப்தம் படைத்தது கிரிக்கெட் ரசிகர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்