• A
  • A
  • A
ஓய்வு முடிவை அறிவித்தார் ராயுடு!

அனைத்து விதமான டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இந்திய வீரர் ராயுடு அறிவித்துள்ளார்.

pc: twitter @ bcci



இந்திய அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கும் அம்பத்தி ராயுடு நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் இந்திய அணியில் நீண்டநாட்களாக மிடில் ஆர்டரில் இருந்து வந்த பிரச்சனைக்கு அவர் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.


இந்நிலையில் அம்பத்தி ராயுடு, ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகத்துக்கு எழுதிய கடிதத்தில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் வெலுத்தும் நோக்கில் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட அனைத்து விதமான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ, ஹைதராபாத், பரோடா மற்றம் விதர்பா கிரிக்கெட் சங்கத்தினருக்கு நன்றிகள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அம்பத்தி ராயுடு இதுவரை 97 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 6 ஆயிரத்து 151 ரன்களை (16 சதம், 34 அரைசதம்) குவித்துள்ளார். அவரின் சராசரி ரன் விகிதம் 45.56 என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க தொடரில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் அவருக்கு அந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்த ராயுடு ஆசிய கோப்பை போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட யோயோ சோதனையை நிறைவு செய்த பின்பே அணியில் இடம்பிடித்தார். அதன்பின் அவர் தொடர்ந்து சிறப்பான முறையில் ஆடியதில் இந்திய அணியில் 4 வது இடத்தில் களமிறங்குவதை உறுதி படுத்திக்கொண்டார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்