• A
  • A
  • A
நடப்பு சாம்பியனை சந்திக்கும் அந்த 12 பேர்! பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட உள்ள 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.



டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை அடுத்து இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் 12 பேர் குழுவை பிசிசிஐ இன்று அறிவித்தது.




அதில் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர், க்ருணல் பாண்டியா மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்துவீசிய கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது முதல் சர்வதேச போட்டியில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இந்திய அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பரான தோனி முதன்முறையாக அணியில் சேர்க்கப்படாத நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில், பல இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸின் அதிரடியை நாளை நடைபெற உள்ள எதிர்கொள்ள உள்ளனர்.

இந்தியா அணி விவரம்: ரோஹித் சர்மா, ஷிகார் தவான், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பூம்ரா, கலீல் அகமது, சாஹல்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்