• A
  • A
  • A
தோனி, கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ள டி20 தொடரில் தோனி மற்றும் கோலி ஆகியோர் இல்லாத இந்திய அணி களமிறங்குகிறது.

கோப்புப்படம்



இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி அபாரமாக கைப்பற்றிய நிலையில், டி20 தொடர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் தொடங்குகிறது.


இந்த டி20 போட்டிக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர், மற்றம் புதிய வீரர்களாக க்ருணல் பாண்டியா, ஷபாஸ் நதீம் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது பலமே.

இந்திய அணியின் பந்துவீச்சில் தற்போது அசத்தி வரும் இடக்கை பந்துவீச்சாளர் கலீல் அகமது மற்றும் முக்கிய பவுலர்களான புவனேஷ்வர் குமார், பூம்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சுழல் பந்துவீச்சில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

இருப்பினும் இந்திய சுற்றுப்பயணத்தில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி பிராத்வெஸ்ட் தலைமையில் களமிறங்குகிறது. மேலும் டேரன் பிராவோ, கிய்ரன் பொல்லார்டு மற்றும் ரஸ்ஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஆட உள்ளனர் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி முனைப்பில் களமிறங்குவது உறுதி.

டி20 போட்டியின் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதிய கடைசி 8 ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் அந்த அணி 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்களுடன் இந்திய அணியும், அதிரடி வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கும் டி20 தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைவது உறுதி என்பதே உண்மை.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகார் தவான், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பூம்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், நதீம்.

வெஸ்ட் இண்டீஸ்: கார்லஸ் பிராத்வெய்ட், பேபியன் அலென், டேரன் பிராவோ, ஹெட்மயர், கீமோ பால், கிய்ரன் பொல்லார்டு, தினேஷ் ராம்தின், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரூதர்போர்டு, ஓஸ்னே தாமஸ், கார்ரி பியர், ஓபட் மெக்காய், ரோவ்மென் பவ்வல், நிக்கோலஸ் பூர்ரன்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்