• A
  • A
  • A
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை - இந்திய வீரர்கள் ஆதிக்கம்!

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் 5 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.



ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய வீரர்கள் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.


அதன் படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 10 ஆயிரம் ரன்கள் கடந்தது உட்பட பல சாதனைகளை படைத்தார்.

கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா 871 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கும் அம்பத்தி ராயுடு 24 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சோபிக்கத் தவறிய ஷிகார் தவான் 4 இடங்கள் சரிந்து 9-வது இடத்தில் உள்ளார்.

இதே போன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய அணியின் பூம்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய சுழல் பந்து வீச்சாளரான சாஹல் மூன்று இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை இங்கிலாந்து வீரர் அடில் ரஷித்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் சாஹல் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



அணிகளின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி(126 புள்ளி) முதல் இடத்திலும், இந்தியா (121 புள்ளி) இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணி 112 புள்ளிகளுடன் உள்ளது.


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்