• A
  • A
  • A
இந்திய அணியில் இருந்து தோனி நீக்கம்...?

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து தோனிக்கு கட்டாய ஓய்வு அளிக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்



வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளது.


இந்நிலையில் அதற்கான இந்திய அணியை விரைவில் அறிவிக்க உள்ளனர். அந்த அணியில் தோனிக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு விட்டு இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பைத் தொடருக்கான இளம் வீரர்களை தயார் செய்யும் நோக்கில் தேர்வுக் குழுவினர் இந்த முடிவை எடுக்க உள்ளதாக தெரிகிறது.

இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங்கில் தோனி பல சாதனைகள் செய்து வந்தாலும் தொடர்ச்சியாக பேட்டிங்கில் சோபிக்க தவறி வருவதும் பிசிசிஐ-ன் இந்த முடிவிக்கு காரணமாக அமைந்துள்ளது. தோனி கடந்த 10 மாதங்களில் விளையாடிய 21 ஒருநாள் போட்டிகளில் 389 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்