• A
  • A
  • A
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பிக்சிங்! 3 வீரர்கள் சஸ்பெண்ட்...

துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக, ஹாங்காங் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

கோப்புப்படம்



ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹாங்காங் அணி சிறப்பாக விளையாடியது. அப்போட்டிகளில் மேட்ச் பிக்சிங் செய்ததாக அந்த அணியின் மூன்று வீரர்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) சஸ்பெண்ட் செய்துள்ளது.


பந்துவீச்சாளர் நதீம், இர்பான் அகமது மற்றும் ஹசீப் அம்ஜத் ஆகியோரை சஸ்பென்ட் செய்துள்ள ஐசிசி, இவர்கள் இரண்டு வாரத்துக்குள் தங்கள் விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதில், இடதுகை சுழற்பந்து வீச்சாளரான நதீம், இந்தியாவுக்கு எதிராக 18ம் தேதியன்று நடந்த போட்டியில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 10 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்தார்.

இவர்கள் மூவருமே பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்