• A
  • A
  • A
இங்கிலாந்தைத் திணரடித்த குல்தீப் யாதவ்!

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 268 ரன்களை இந்தியா அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.குல்தீப்ப் யாதவ் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.



இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, முதலில் நடந்த டி20 போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று நாட்டிங்காமில் நடந்து வரும் முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


முதலில் பேட் செய்ய இறங்கிய இங்கிலாந்தின் ஜேசன் ராய் மற்றும் ஜானி பெர்ஸ்டவ் ஜோடி 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரைக் கூட்டினர்.

பின்னர் குல்தீப் யாதவ் பந்து வீசத் தொடங்கியதும் விக்கெட்டுகள் மளமளவென விழத்தொடங்கின. குல்தீப், 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார். அவர் வீசிய பந்துகள் எதுவுமே பவுண்ட்ரியைத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ஆட்டமிறங்கியுள்ள இந்தியா தற்போது 17 ஓவர்களில், 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் குவித்து ஆடிவருகிறது. 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். ரோகித் ஷர்மா 44 ரன்களுடனும், விராத் கோலி 29 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்