• A
  • A
  • A
ஸ்ரீசாந்தின் 'ஹல்க்' லுக்; ஹர்பஜனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தடைவிதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் கட்டுமஸ்தான உடற்கட்டு விடியோவையும் ஹர்பஜனையும் இணைத்து வெளிவரும் மீம்ஸ்கள் இணையத்தில் வைராலாகி வருகின்றன.

நன்றி: ஸ்ரீசாந்த் இன்ஸ்டாகிராம் பக்கம்



இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். விக்கெட் எடுத்தால் டான்ஸ் ஆடும் ஸ்டைலை ப்ராவோவுக்கு முன்னரே கடைபிடித்தவர் இவர். மிக இளம் வயதிலேயே உச்சத்தையும், வீழ்ச்சியையும் சந்தித்தவர் இவர்தான்.


அன்றைய காலகட்டத்தில் பற்பல சர்ச்சையில் சிக்கி, மாத மாதம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியும் வந்தார். ஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் சைமண்ட்சை வம்புக்கு இழுத்தது முதல் ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் சிங்கிடம் அடி வாங்கியது வரை மிகவும் ஹாட்-டாபிக்காக ஓடியது ஸ்ரீசாந்த் சர்ச்சைகள்.





கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின்போது, இவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தற்போது கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2017 -ஆம் ஆண்டு வெளிவந்த அக்சர் 2 ஹிந்தி படத்திலும் டீம் 5 என்ற மலையாள படத்திலும் நடித்திருந்தார். டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் தலைகாட்டியதோடு அரசியலிலும் கால் பதித்தார்.

தடையால் துவழாமல் ஜிம்முக்குள் அடியெடுத்து வைத்த ஸ்ரீசாந்த் அவ்வப்போது ஒர்க்-அவுட் செய்யும் விடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் இவர் பதிவிட்ட விடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஹாலிவுட் ஹீரோக்களையும், பல பாடி பில்டர்களையும் மிஞ்சும் அளவு கட்டுமஸ்தான உடலில் பல்க் காக இருக்கிறார் ஸ்ரீசாந்த்.




#hard work# love

A post shared by Sree Santh (@sreesanthnair36) on



பலரும் இதனை பகிர்வதோடு, ஐபிஎல் -லில் இவரை கன்னத்தில் அரைந்த ஹர்பஜனையும் இவரையும் வைத்து கிண்டலாக மீம்ஸ்கள் வெளிவந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.







CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்