• A
  • A
  • A
இங்கிலாந்தை கிண்டல் செய்த சேவாக்!

ஐதராபாத்: டி20 தொடரில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து இங்கிலாந்தை விரேந்திர சேவாக் தனது டுவிட்டர் தளத்தில் கலாய்த்துள்ளார்.

கோப்புப்படம்



இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் முன்னதாக நடந்த மூன்று டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் இந்தியா விளையாடியது. இதில் ஞாயிற்றுகிழமை (நேற்று) நடந்த தொடரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்திய அணி இந்த தொடரை வெற்றிபெற்றதை அடுத்து பலரும் பாராட்டி வரும் நிலையில் , இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் தளத்தில் பாராட்டினை பதிவிட்டார்.

அதில், இங்கிலாந்தின் தோல்வி வருத்தம் அளிப்பதாக நக்கலாக கூறியுள்ளார். மேலும், ரோகித் ஷர்மாவின் திறமை இன்னும் உயிருடன் இருக்கிறது என அவரை பாராட்டியும், பந்து வீச்சிலும் , பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை 'குங்ஃபூ பாண்டியா' எனவும் குறிப்பிட்ட அவர் மொத்ததில் இந்த தொடரை வெல்ல இந்திய அணிக்கு முழு தகுதியும் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.



இந்திய அணி 2011, 2014 ஆண்டுகளில் நடந்த டி20 தொடரில் அடுத்தடுத்து தோல்வியடைந்த பின் இந்த தொடர் மூலம் தனது முதல் டி20 தொடரை இங்கிலாந்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்