• A
  • A
  • A
'ரூ.500க்கு பந்துவீசிய சைனிக்கு' இந்திய அணியில் இடம்: புறக்கணித்தவர்களை கலாய்த்த கம்பீர்

புதுதில்லி: நவ்தீப் சைனி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றதையடுத்து, பிஷன் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகியோரை விமர்சித்து கவுதம் கம்பீர் டிவிட்டரில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்



கடந்த 2013-ம் ஆண்டு வரை நவ்தீப் ஷைனியின் நிலைமை நாள்தோறும் தில்லி ரோஷ்னஹாரா கிரிக்கெட் மைதானத்துக்கு வந்து பந்துவீச்சுப் பயிற்சி மேற்கொள்வது, யாராவது கிரிக்கெட் விளையாட அழைத்தால், ரூ.250 முதல் ரூ.500 வரை பணத்தைப் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாடச் செல்வது, இதுதான் வாழ்க்கையாக இருந்தது.


இவரின் திறமையைக் கண்டு வியந்த கவுதம் கம்பீர், கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்து பயிற்சியளித்துள்ளார்.

2013-ல் தன் கேப்டன்சியையே பணயம் வைத்து நிறுவனத்துடன் மோதல் மேற்கொண்டு சைனியை டெல்லி ரஞ்சி அணியில் சேர்த்தார். இதையடுத்து, முன்னாள் இந்திய வீரர்களான பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகியோர் கம்பீரை கடும் விமர்சனம் செய்தனர். “ஒரு வெளியாள் எப்படி டெல்லி அணிக்குள் வரலாம்?” என்று கூறி சர்ச்சை ஆனது தெரிந்ததே.

பின்னர் இந்திய "ஏ" அணியில் விளையாடிய சைனி, 2017 ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்காகவும், 2018ல் பெங்களூரு அணிக்காகவும் விளையாடினார்.

நேற்று (திங்கட்கிழமை) நடந்த உடற்தகுதி தேர்வில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் முகமது ஷமிக்கு பதிலாக நவ்தீப் சைனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பேடி மற்றும் சவுகான் ஆகியோரை தாக்கி பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

“தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஒரு சில உறுப்பினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். பிஷன் பேடி, சவுகான் ஆகியோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.காரணம், ‘வெளியாள்’ என்று அழைத்த நவ்தீப் சைனி இந்திய அணியில் இடம்பெற்றுவிட்டார்.

பெங்களூருவில் கூட கருப்புப் பட்டைகள் 225 ரூபாய்க்கு கிடைப்பதாக நான் கேள்விப்பட்டேன். சார், முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் நவ்தீப் முதலில் ஒர் இந்தியர்” என்று பதிவிட்டுள்ளார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்