• A
  • A
  • A
வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா: வெற்றியை ருசிக்குமா?

சென்னை: முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டம் மற்றும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் இந்தியா இன்று (புதன்கிழமை) மோதுகிறது.

கோப்புப்படம்



இலங்கை நடத்தி வரும் இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை அந்நாட்டு அணியையும், வங்கதேசத்தையும் தலா ஒரு முறை வீழ்த்தியுள்ளது.


கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடம் இந்திய அணி வீழ்ந்தது.

இருப்பினும், தனது 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையுடன் கடந்த 10-ம் தேதி மோதிய வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவுடனான ஆட்டத்தில் தோல்வியுடன் தொடங்கிய வங்கதேசம், பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் விளையாடும்.

லீக் சுற்றில் இந்தியாவின் கடைசி ஆட்டம் என்பதால், இன்று நடைபெறவுள்ள ஆட்டம் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தாலும், இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் கடைசி ஆட்ட முடிவை பொறுத்தே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா என்பது தெரியும்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்