• A
  • A
  • A
400வது விக்கெட் சாதனை... ஸ்டைலாக செய்த தோனி..!

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தோனி ஸ்டைலாக ஸ்டம்பிங் செய்து 400 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நன்றி: டுவிட்டர்/பிசிசிஐ



தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்க அணி 304 ரன்கள் என்ற இலக்கை விரட்டி விளையாடியது.


இதில், 17வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்கிராம் அந்த பந்தை கால் திசையில் டிரைவ் ஆட முயன்றார். ஆனால், அந்த பந்து சுழன்று தோனியின் கைக்கு சென்றது.

தோனியோ பிடித்ததும் தெரியாமல் அடித்ததும் தெரியாமல் ஸ்டம்பிங் செய்தார். கிரீஸுக்கு வெளியே நின்ற மார்கிராம் தவறவிட்ட பந்தை திரும்பி பார்ப்பதற்குள் தோனி ஸ்டம்புகளை தகர்த்துவிட்டார்.

இதன்மூலம், தோனி 400 விக்கெட்டுகளின் வீழ்ச்சிக்கு காரணமான முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச அளவில் தோனி 4வது இடத்தில் உள்ளார்.

முதல் 3 இடங்களில் சங்கக்காரா 482 விக்கெட்டுகள், கில்கிறிஸ்ட் 472 விக்கெட்டுகள், பௌச்சர் 424 விக்கெட்டுகள் உள்ளனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்