• A
  • A
  • A
கோலிக்கு இதே வழக்கமா போச்சு..!

மும்பை: தென் ஆப்பிரிக்காவுடனான 3வது ஒருநாள் போட்டியில் 34வது ஒருநாள் கிரிக்கெட் சதம் அடித்த கோலியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

கோப்புப்படம்



தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 34 வது சதத்தை அடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 160 ரன்கள் குவித்தார்.

இதனை சச்சின் டெண்டுல்கர் களத்தில் இறங்கி சதம் அடிப்பது கோலிக்கு வழக்கமாகிவிட்டது என பாராட்டி டுவீட் செய்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் கோலி தான் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள், விராட் கோலி 34 சதங்கள்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்