• A
  • A
  • A
மளமளவென விழுந்த 3 விக்கெட்டுகள்; கடைசி கட்டத்தில் சொதப்பிய தென் ஆப்பிரிக்கா

செஞ்சூரியன்: இந்தியாவுடனான 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.



தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று(சனிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


தொடக்க ஆட்டக்காரர்களாக எல்கர் மற்றும் மார்க்கிராம் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி சீரான தொடக்கம் தந்தது. மார்க்கிராம் டெஸ்ட் அரங்கில் 2வது அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் எல்கர் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் சுழலில் வீழ்ந்தார்.

அவரைத்தொடர்ந்து அம்லா களமிறங்கினார். அரைசதம் அடித்த பின்னர் சற்று துரிதமாக ரன் குவித்து வந்த மார்க்கிராம் சதம் அடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 94 ரன்கள் எடுத்திருந்த போது அவரும் அஸ்வின் வலையில் வீழ்ந்தார்.

பின்னர் டிவில்லியர்ஸ் 20 ரன்களில் இஷாந்த் வேகத்தில் போல்டானார். மறுமுனையில் பொறுமையாக விளையாடி வந்த அம்லா அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார்.

இதையடுத்து, அம்லா, டு பிளெசிஸ் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி 10 ஓவர் என்ற நிலையை கடந்தது.

அப்போது பாண்டியாவின் சூப்பர் த்ரோவால் அம்லா 82 ரன்னில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த டி காக் முதல் பந்திலேயே அஸ்வின் சுழலில் கோலியிடம் கேட்ச் ஆனார். இதனால், முதல் நாள் ஆட்டத்தை வலுவான நிலையில் முடிக்க எண்ணியிருந்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பிடியில் சிக்கியது.

இந்த நெருக்கடியில் அடுத்து களமிறங்கிய பிலாண்டர் ரன் ஏதும் எடுக்காமல் அவசியமில்லாமல் ரன் அவுட் ஆனார்.

இதனால் கடைசி நொடிகளை டு பிளெசிஸ் மற்றும் மஹாராஜ் கடும் நெருக்கடியுடன் விளையாடினர். அவர்கள் முதல் நாளில் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க மண்ணில் எதிர்பாராத வகையில் ஒரே நாளில் 31 ஓவர்கள் வீசிய அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்காற்றினார். இஷாந்த் சர்மா 1 விக்கெட் வீழ்த்தினார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்