• A
  • A
  • A
ரோஹித் சர்மாவுக்கு குவியும் கடுமையான விமர்சனங்கள்

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 59 பந்தில் 11 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மாவை ரசிகர்கள் டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கோப்புப்படம்



இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 286 ரன்னில் ஆல் அவுட் ஆகிய நிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கியது.


இந்தியா 27 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது புஜாராவுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் ரோஹித் சர்மா 5 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார்.

2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாராவுடன் இணைந்து ரோஹித் சர்மா மிகவும் மந்தமாக விளையாடினார். ரன்கள் அடிக்க திணறினார். 59 பந்துகளை சந்தித்த ரோஹித் சர்மா 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

இந்தியாவில் இரட்டை சதம், அதிவேக சதம் என அடித்துவிட்டு தென் ஆப்பிரிக்காவில் திணறியதால் ரோஹித் சர்மா மீது ரசிகர்களுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் டுவிட்டரில் ரசிகர்கள் அவரை சிறந்த நைட் வாட்ச்மேன் என்று கேலி செய்துள்ளனர்.

ரோஹித் சர்மா வேகப்பந்து வீச்சை ஒரு மணி நேரமாக தாக்குப்பிடித்தார். இதனால், இந்தியா கடந்த முப்பது ஆண்டுகளில் சிறந்த நைட்வாட்ச்மேனை தயார் செய்துள்ளதாக நினைக்கிறேன் என்று ரசிகர் ஒருவர் திட்டித் தீர்த்துள்ளார்.

புஜாரா பொறுமையாக விளையாடிய அதே நேரத்தில், ரோஹித் சர்மாவை பார்க்கும்போது நைட் வாட்ச்மேன் போன்று தோன்றியது. இது உங்களுக்கு ‘டெஸ்ட் (பரிசோதனை)’ கிரிக்கெட் மிஸ்டர் ரோஹித் சர்மா என்றும், கவலைப்படாதீர்கள் ரோஹித் சர்மா, நீங்கள் இந்தியாவுக்கு திரும்பி, பிளாட் பிட்சியில் அர்த்தமற்ற ஒருநாள் போட்டியில் இன்னொரு இரட்டை சதம் அடிக்க முடியும். உங்களுக்க்கென்ற கூட்டம் செம்மறி ஆட்டுக்கூட்டம் போன்று பின்னால் வருவார்கள் என்றும் அவரை கலாய்த்து வருகின்றனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்