• A
  • A
  • A
ஒருவர் விரைவில் இறக்கப்போகிறார் என்பதன் முதல் அறிகுறி இதுதானாம்...

இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் வெறும் கட்டுக்கதை என்று நாம் ஒருபக்கம் புறந்தள்ளினாலும், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆண்வுகளின் உண்மைகளை நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.



அந்த வகையில், சில பிரச்னைகள் ஒருவரின் மரணத்தை நெருங்கும் அறிகுறி என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில்,


புதிய ஆய்வொன்றில், நுகரும் உணர்வை இழப்பது, மரணத்தை குறிக்கும் அறிகுறிகளில் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது வயது, பாலினம், டிமென்ஷியா எனும் மன சோர்வு நோய் சார்ந்து வேறுபடும் என்றும் கூறியுள்ளனர்.

ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்தியவர் டாக்டர் ஜோன்ஸ் எனும் முதன்மை ஆராய்ச்சியாளர் ஆவார்.

இந்த ஆய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஆய்வில் கலந்துக் கொண்டவர் 40 – 90 வயதுக்குட்பட்டவர்கள்

சுகாதாரம் மற்றும் அறிவாற்றல் சார்ந்து யாரெல்லாம் சரியாக நுகரும் திறன் கொண்டிருந்தனரோ அவர்கள் எல்லாம் 8% இறக்கும் வாய்ப்பு குறைவாக கொண்டிருந்தனர்.

சாதாரணமாக நுகரும் திறன் கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், யாருக்கெல்லாம் வாசனை நுகர்ந்து கண்டறிவதில் சிரமம் இருந்ததோ அவர்கள் 19% வேகமாக இறக்கும் வாய்ப்பு கொண்டிருந்தனர்.

23% இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 1774ல் 411பேர் ஆய்வு நடத்தி கொண்டிருந்த காலத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் எல்லாம் இவர்களில் சரியாக வாசனை நுகர்வும் திறன் கொண்டவர்கள் 8% குறைவான இறக்கும் சதவீதம் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை வைத்து, ஆய்வாளர்கள், வாசனை நுகரும் திறனானது, நடுவயது மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் மரணத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கிறது என கூறியுள்ளனர்.

நுகரும் திறனானது, மூளையின் வயது / செயற்திறனை குறிப்பதாக இருக்கிறது என்றும் இந்த ஆய்வை நடத்தியவர்கள் பரிசோதனைகளுக்கு பிறகு கூறியுள்ளனர்

சிலருக்கு மூக்கு பகுதியில் விபத்து அல்லது சைனஸ் போன்ற வேறு ஆரோக்கிய காரணங்களால் கூட நுகரும் திறனில் குறைபாடு இருக்கலாம். இந்த நிலைகளுக்கு இது பொருந்தாது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்