• A
  • A
  • A
ராயல் என்பீல்டை ஒரம்கட்ட வரும் 'ஜாவா'

ராயல் என்பீல்டுக்கு போட்டியாக கிளாசிக் மாடல் பைக்கான 'ஜாவா' மீண்டும் சந்தையில் களமிறங்க உள்ளது.

நன்றி: @LicensingCorner டுவிட்டர் பக்கம்



'ஜாவா' பைக்குக்கென்று இன்றுவரை தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இப்போதுகூட, இளைஞர்களால் சொப்பனமாக மதிக்கப்படுகிறது. ஜாவா பைக் வைத்திருப்பவபர்கள் தனியாக கிளப் ஆரம்பித்து லாங்-ட்ரிப்களும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.


இத்தகைய ஜாவா பைக்குகளைப் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்பாவிடமோ, தாத்தாவிடமோ ஜாவா பைக்கைப் பற்றிக் கேட்டால், பாகுபலியின் அப்பா அமரேந்திர பாகுபலியைப் போல பில்டப்புடன், ஜாவா பைக்கை வர்ணிக்கத் தொடங்கி விடுவர்.

1960 -களில் வெளிவந்த இந்த கிளாசிக் வண்டிகளை ரோட்டில் அதிகம் பார்த்திருக்க முடியாது. தமிழ் சினிமாக்களில் ரஜினி, கமல் போன்றவர்கள் ஒட்டிவருவதை கண்டிருப்போம். காட்டிலும், மேட்டிலும் பறந்து, மலையிலும், குட்டையிலும் கூட ஓட்டி சாகசம் செய்வார்கள். அத்தகைய அளவு உறுதியுடனும் சிறந்த செயல்திறனுடன் தயாரிக்கப்பட்டது ஜாவா பைக்குகள்.

செக்கோஸ்லவோகியா நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம், 'ஐடியல் ஜாவா' நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் 1950 -ஆம் ஆண்டு பைக்குகளை ஜாவா,எஸ்டி என்ற பெயரில் வெளியிட்டது. பின்னர் 1990 -களில் இந்த வண்டிகளின் தயாரிப்பை இந்நிறுவனம் நிறுத்திவிட்டது.

இதையடுத்து, நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் வெளியாகி, சந்தையில் ஏக கிராக்கி பெற்றிருக்கும் ராயல் என்பீல்டு பைக் இப்போது பட்டிதொட்டியெங்கும் புளுதியைக் கிளப்பி வருகிறது.

இந்நிலையில், இதற்கு மிகுந்த போட்டியளிக்கும் வகையிலும், ராயல் என்பீல்டை ஓரம்கட்டும் வகையிலும் ஜாவா பைக்குகள் புதுப்பொலிவுடன் மீண்டும் சந்தைக்கு வருகின்றன.

சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஜாவா பைக்குகளை விற்கும் உரிமையை பெற்றதையடுத்து, விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகும் என்று மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



அதே 295 சிசி என்ஜினுடனும், ஏபிஎஸ் ப்ரேக்ஸுடன் புதுப்பொலிவுடன் தயாராகியிருக்கிறது ஜாவா.

இந்த ஆண்டே வெளிவரவிருக்கும் ஜாவா பைக்கை வாங்க சிறுசுகள் முதல் பெருசுகள் வரை பாரபட்சம் இல்லாமல் போட்டி போடுவார்கள் என்பது உறுதி.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்