• A
  • A
  • A
ஏன், எதற்கு கொடநாடு கொலையும், கொள்ளையும்? பரபரப்பான விடியோ வெளியீடு

2017இல் கோடநாட்டில் ஏற்பட்ட காவலாளி கொலை மற்றும் எஸ்டேட் பொருட்கள் திருட்டு குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.2017இல் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் எஸ்டேட்டில் பொருட்கள் திருட்டுப்போகப்பட்டது. இந்த திருட்டு எதற்காக., யாரால் திட்டமிடப்பட்டது என்பது ஆவணப்படுத்தை தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார்

கனகராஜ்: நான்கு வருடங்களாக ஜெயலலிதாவின் ஓட்டுநராக பணி புரிந்து வந்தவர். போயஸ்கார்டன் மற்றும் கொடநாடு ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஓட்டுநராக பணி புரிந்தவர்.

மூன்று வருடங்களுக்கு முன்னாள் பதவியில் இருந்து விலக்கப்பட்ட கனகராஜ், ஒரு விபத்தில் உயிரிழந்தார்.யார் கனகராஜ்., என்ன ஸ்கெட்ச்: சயான்(கேரளா) பதில்


2002இல் இருந்து பேக்கரி ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். சம்பவம் நடந்த போதும் நான் பேக்கரி நடத்தி வந்தேன். கனகராஜை எனக்கு நான்கு வருடங்களாக தெரியும். சசிகலாவின் ஓட்டுநர் என்று அறிமுகமானார். ஜெயலலிதாவுக்கும் அவ்வப்போது ஓட்டுநராக பணிபுரிந்ததாக கூறினார். எனக்கு பொறியாளர் நண்பர் ஒருவர் உண்டு அவரின் மூலமாகவே கனகராஜ்ஜை தெரியும்.

ஜெயலலிதா 75 நாள் அப்போலோவில் இருந்தபோது, அவர் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்னாள், கனகராஜ் என்னிடம், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து மதிப்புமிக்க ஆவணங்கள் எடுத்து வரவேண்டும் என அழைத்தார்.

இந்த ஆவணங்கள் எல்லாம் எதற்கு என்று கேட்டேன். இந்த அனைத்து ஆவணங்களும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரச்சொன்னதாக கூறினார்.

அதேபோல் கனகராஜ், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டையனோடு சந்தித்து சால்வை அணிவித்து பூச்செண்டு கொடுப்பது போன்ற புகைப்படம் என்னிடம் காண்பித்தார்.அதேபோல், கனகராஜ் மற்றும் பழனிசாமி ஒரே ஊரை சேர்ந்த ஒரே சாதிக்காரர்ரகள். மேலும் அவர்கள் இருவரும் ஒரே குலசாமியை வணங்கி வந்தவர்கள்.

கொடநாட்டில் இருந்து ஆவணங்களை எடுப்பதற்கு ஒரு அணியை உருவாக்க வேண்டும். அணியில் யாரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருக்க கூடாது அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என கனகராஜ் என்னிடம் கேட்டுக்கொண்டார். இந்த வேலையை சரியாக செய்து முடித்தால் 5 கோடி தருவதாக கூறினார்.

அதன் பின் நான் ஒரு அணியை உருவாக்கி ஊட்டிக்கு சென்றேன்.

மனோஜ் எனப்படும் வலையர் மனோஜ்(கேரளா) மூன்றாம் குற்றவாளி- திட்டத்தை செயல்படுத்தினோம்.

கொடநாட்டில் ரூ.2000 கோடி பணம் இருப்பதாகவும் அதை திருட வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் ரூ.2000 கோடி திருடவேண்டும், அதை எப்படி ஒரு எண்டிவர் மற்றும் இனோவா காரில் எடுத்த செல்ல முடியும் என்று கேட்டேன். அதன்பின் தான் சயான் என்னிடம் உண்மையை சொன்னார். பணத்தை சாமி(பழனிசாமி) தருவார், திருடப்போவது வேறு என்று சொன்னார். உடனே நான் தடுத்த நிறுத்த முயன்றேன். அதன்பின் இது யாருக்காக என்று கேட்டேன். அப்போதுதான் சயான் சொன்னார், இது பெரிய விஷயம் இல்லை, இதனால் எந்த வழக்கும் பதிவாகாது எனவும், இந்த விஷயம் தற்போதயை அமைச்சர் பழனிசாமிக்காக செய்வதாகவும் பதிலளித்தார்.

பின், காலை ஒரு பத்து, பதினோறு மணியிருக்கும் எஸ்டேட் வாசலில் இரண்டு காவலாளிகள் இருந்தனர். நான், ஜெம்சிர், கனகராஜ், சியான் உள்ளே நுழைந்தோம், ஜெம்சிர்ருக்கு எதுக்கு வந்தோம் என்றே தெரியாது. ஆனால் சியான் என்னிடம் ஆவணங்கள்தான் எடுக்க போகிறோம் என்று கூறிவிட்டார்.

அப்போது கூட கனகராஜ் ரூ.2000 கோடி பணம் திருடப்போவதாக கூறிக்கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சியான் எனது தூரத்து சொந்தம். அங்கு பணத்தை தேடுவது போன்று தேடி, ஒரு சில ஆவணங்களை மட்டுமே கனகராஜ் எடுத்தார், பின்பு போவோம் எனக் கூறினார்.

நாங்கள் குல்லா அணிந்திருந்தோம், கை க்ளவுஸ் அணிந்திருந்தோம். அதோடு கையில் இரும்பு கம்பி மற்றும் கதவை உடைக்க கட்டர் எடுத்து சென்றோம். அங்கு பாதுகாப்பிற்கு எந்த நாய்களும் இல்லை. இரண்டே காவளாளிதான் இருந்தனர்.

சயான்: இரண்டு காவலாளியை தாண்டினால் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார்கள். அதன்படி 2000 ஏக்கர் எஸ்டேட்டுக்கு இரண்டே காவலாளி தான் இருந்தார்கள். எந்த சிசிடிவியும் வேலை செய்யவில்லை என்றார்.

இறந்து இரண்டு வருடங்களாகிற்று, அவர்தான் சிசிடிவி பராமரிப்பு பணியாளராக பணிபுரிந்தார். ஏழு வருடங்களாக அங்கு பணியாற்றினார்.

சில நாட்களுக்கு பின்.,கனகராஜ் (முதல் குற்றவாளி):
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சயான்: பாலக்காடு அருகே குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். சயான் படுகாயங்களோடு உயிர் தப்பினார்.

காவலாளி ஓம் பகதூர்: மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

சக காவலாளி கிருஷ்ண பகதூர்: அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை தெளிவாக, இந்த ஆவணப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுற்கு பின்னாவது ஜெயலலிதாவின் மரணங்களில் முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா.? என்பதே இதை பார்ப்பவர்களின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்