• A
  • A
  • A
'விஸ்வாசம் இல்லாமல் ரஜினியால் முதல்வராக முடியாது..!'- அப்சரா ரெட்டி

சென்னை: "மக்கள் விஸ்வாசம் இல்லாமல் ரஜினி எந்த பேட்டைக்கு போனாலும் முதலமைச்சராக முடியாது" என, மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருநங்கை அப்சரா ரெட்டி விமர்சித்துள்ளார்.



சென்னை விமானநிலையத்தில் திருநங்கை அப்சரா செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக ஏஜெண்டாக ரஜினியை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ரஜினிகாந்த் எந்த பேட்டைக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் மக்கள் விஸ்வாசம் இல்லாமல் ரஜினியால் முதலமைச்சராக முடியாது.

கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட இடங்களை மோடி வந்து பார்க்கவில்லை. 8 வழி சாலை பிரச்சனை நீட் பிரச்சனை எதையும் கண்டு கொள்ளவில்லை, ஆனால் பிரியங்கா சோப்ராவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். இவர்கள் தமிழகத்துக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வரவில்லை" என்று கூறினார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்