• A
  • A
  • A
இது தான் 'மோடி கேர்': ஆக்ராவில் அதிரடி பேச்சு!

ஆக்ரா: மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, தற்போது ஆக்ராவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்து மக்களிடையே பேசி வருகிறார்.



மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.பின் பொதுமக்களிடையே பேசுகையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா வரலாற்றுச் சிறப்புடையது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அசாம் மாநிலத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பேசினார்.

அதனை தொடர்ந்து தற்போது ஆக்ராவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின் அம்மாநில மக்களிடையே பேசிய மோடி, நம்முடைய கங்கா திட்டத்தால் நதிகள் சுத்தமாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யமுனா ஆற்றையும் சுத்தம் செய்வது மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. எனவே விரைவில் இத்திட்டமும் மேற்கொள்ளப்படும்

மேலும் கடந்த நூறு நாட்களில் மட்டும் ஏழு லட்ச ஏழை மக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்குக்கீழ் பயணடைந்துள்ளனர். இது தான் மோடி கேர் என்றார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்