• A
  • A
  • A
புதுக்கோட்டையில் பயங்கரம்: சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 10பேர் பலி

புதுக்கோட்டை: திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 10 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.



புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும் - கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் உட்பட வேனில் பயனித்த 10 பேரும் பலியாகினர். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐயப்ப சீசனை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் அவர்கள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரே நேரத்தில் 10 ஐயப்ப பக்தர்கள் வரை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்