• A
  • A
  • A
'மெர்சலுக்கு பாஜகவைப் போல் சர்காருக்கு அதிமுக'

விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான பழ.கருப்பையா தெரிவித்தார்.



திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று எழுதிய எழுத்தாளர் நாகசாமியின் கருத்துக்கு பதிலடி கொடுக்க திராவிடர் கழகத்தில் அக்கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, " தமிழரின் அடையாளமாகிய திருக்குறளை இப்படி மனுதர்மத்தின் சாரம் என்று ஒருவர் எழுதியுள்ளார்.

ஆனால் அதைக் கண்டிக்க திராவிடர் கழகம் தான் முன்வந்துள்ளது. ஆனால் கட்சிகள் வைத்திருக்கும் இலக்கிய அணிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன. அதற்கு ஒரு செயலாளர், துனைச் செயலாளர் என்று சிலர் இருக்கின்றனர். அதெல்லாம் வர்த்தக அணிகள் ஆகிவிட்டது"

விஜய்யுடன் பழகியதை வைத்து சொல்கிறேன்,

விஜய் நிச்சையமாக அரசியலுக்கு வருவார். எனக்கு நல்ல குடும்ப சூழல் இருக்கிறது, பணம் வழிகிறது ஆனால் என் மீது அன்பு செலுத்திய மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்' என்று விஜய் கூறுவார். முதலில் அதை செய்யுங்கள் என்று கூறுவேன்.

க்ரியேடிவ் இண்டலிஜன்ஸ் இல்லாதவர்கள் எல்லம் அமைச்சர்களாக உள்ளனர். கடலை மிட்டாய் திண்ணுக்கிட்டு இருந்த கடம்பூர் ராஜூ அமைச்சராகிவிட்டார்.

காமராஜர் ஒரு முடிவை எடுக்கும் முன் எல்லோரிடமும் கலந்து விவாதிப்பார். கலைஞர் அடுத்தவரிடம் பேசுவார்.

1000 வருடங்களுக்கு மேலாக கல்லணை, வீரநாரயணபுரம் அணைகள் பயன் தருகின்றன என்றால் அதற்கு காரணம் க்ரியேடிவ் இண்டலிஜ்ன்ஸ் தான். ஆனால் இவர்களால் ஒரு தடுப்பணை கட்ட முடிந்ததா? தணிக்கை குழு அனுமதித்து வெளியிட்ட படத்திற்கு தடை கேட்பார்களா?.

எல்லோரிடமும் வாக்கெடுப்பு நடத்தி படத்தை வெளியிட வேண்டுமா?. மெர்சலை பா.ஜ.க எப்படி பெரும் வெற்றிக்கு கொண்டு சேர்த்ததோ அதேபோல் சர்காரையும் பெரு வெற்றிக்கு அமைச்சர்கள் கொண்டு சேர்ப்பார்கள். அதைபற்றி தவறாக பேசி தான் அதிலே வலு சேர்க்கிறார்கள்'என்றார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்