• A
  • A
  • A
6 பால்..43 ரன்கள்... அதிரடி காட்டிய நியூஸிலாந்து வீரர்கள்!

நியூஸிலாந்து: நியூஸிலாந்தில் நடைபெற்ற லிஸ்ட்-ஏ வகையிலான கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது நார்தர்ன் டிஸ்டிரிக்ட் அணி.

நன்றி: @Northern Districts ‏டுவிட்டர் பக்கம்



நியூஸிலாந்தில் நடைபெற்றும் வரும் உள்ளூர் போட்டியான போர்ட் கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டர்ல் ஸ்டேக்ஸ் மற்றும் நார்தர்ன் டிஸ்டிரிக்ட் அணிகள் மோதின.


இப்போட்டியில் சென்ட்ரல் அணி வீரர் ஒருவர் வீசிய ஓவரில் நார்தர்ன் டிஸ்டிரிக்ட் அணி வீரர்கள் ஜோ கார்டர் மற்றும் பிரெட் ஹேம்டன் இணைந்து 43 ரன்கள் குவித்து லிஸ்ட்-ஏ வகை கிரிக்கெட்டில் புதிய உலகச் சாதனை படைத்தனர்.

அந்த ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள் விவரம் 4,6 (நோபால்) ,6 (நோபால்) ,6,1,6,6,6. இதன்மூலம் லிஸ்ட்-ஏ வகை கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை அந்த அணி பெற்றது.

இதற்கு முன் ஜிம்பாவே அணி வீரர் சிகும்புரா ஒரே ஓவரில் 39 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்