• A
  • A
  • A
தினேஷின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி!

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

pc: twitter @ bcci



இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்து திரும்பியதால், அந்த அணி 17.6 ஓவரில் 87 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


பின்னர் இறுதிகட்டத்தில் பேபியன் ஆலன் 27, கீமோ பால் 15 ரன்கள் எடுத்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து தவானும் 3 ரன்கள் எடுத்த நிலையில் தாமஸ் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

பின்னர் பண்ட் 1 ரன்னிலும், கே.எல். ராகுல் 16 ரன்களிலும் பிராத்வெய்ட் பந்துவீச்சில் டேரன் பிராவோவிடம் பிடிபட்டதால் இந்திய அணி 45 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலில் சிக்கியது.

அதன்பின் வந்த மனிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிதானமாக ஆடத் தொடங்கினர். மனிஷ் பாண்டே 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதிவரை ஆடிய தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 31 ரன்களுடனும், இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய க்ருணல் பாண்டியா 9 பந்துகளில் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.



இதனால் இந்திய அணி 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் குல்தீப் யாதவ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.







இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. நாளை மறுநாள் லக்னோவில் நடைபெறும் 2-வது போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்