• A
  • A
  • A
தீபாவளி ஸ்பெஷல் ஷோ- தாராளம் காட்டிய தமிழக அரசு!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.



தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 6 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கம் போல தீபாவளிக்கு பிரம்மாண்ட படங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கின்றன.


விஜய்யின் 'சர்கார்' படமும் ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' படமும் வெளியாகிறது. தொடர் விடுமுறை மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்கார் படத்தின் ரிலீஸ் போன்ற காரணங்களால் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட கோரிக்கை எழுந்தது.

தீபாவளி நாள் மட்டுமன்றி, கூடுதலாக சில நாட்களிலும் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு, இன்று அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதில், தீபாவளி மட்டுமின்றி, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு காட்சி ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்