• A
  • A
  • A
9 ரன்னுக்கு 8 விக்கெட் காலி..! என்னடா டி-20 க்கு வந்த சோதனை!

கோலாலம்பூர்: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தகுதி சுற்றுப்போட்டியில் மியான்மர் அணி 9 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து மலேசிய அணியிடம் படுதோல்வி அடைந்தது.

நன்றி: @ஐசிசி டுவிட்டர் தளம்



டி20 உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்றுப்போட்டிகள் கண்டங்கள் ரீதியாக மலேசிய நாட்டில் நடைபெற்று வருகிறது.


இதையடுத்து, நேற்று நடைபெற்ற ஆசிய கண்டங்கள் ரீதியான தகுதி சுற்றுப் போட்டியில் மலேசியா - மியான்மர் அணிகள் மோதின.

போட்டி துவங்குவதற்கு முன்பு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 10.1 ஓவர்களாக குறைக்கப்பட்டது, இதையடுத்து, முதலில் ஆடிய மியான்மர் அணி வீரர்கள் சீட்டுக் கட்டு போல் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து பெவிலியன் திரும்பினர்.



10.1 ஓவர்களின் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 9 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் 3 உதிரிகள் அடங்கும்.

அணியில் ஏழு வீரர்கள் டக் ஆவுட் ஆகினர். கோ ஹாங் 3, லின் ஹங் 2 மற்றும் லின் ஓ 1 ஆகிய ரன்களை அணிக்காக எடுத்தனர். மலேசியா அணி தரப்பில் பவன்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 3 மைடன்கள் அடங்கும்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் மழை குறுக்கிட்டதால் மலேசிய அணிக்கு இந்த போட்டியில் வெற்றிபெற 8 ஓவர்களில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து, அந்த அணி 1.4 ஓவர்களில் அதாவது பத்தே பந்துகளில் 11 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது.

தற்போது, மியான்மர் அணியின் ஸ்கோர் கார்ட் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்