• A
  • A
  • A
வைரமுத்துவை தொடர்ந்து ராதாரவி! பாலியல் விவகாரத்தில் அடுத்தடுத்து மாட்டும் பிரபலங்கள்

சென்னை: வைரமுத்து மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வந்துக்கொண்டிருப்பதை தொடர்ந்து பெண் ஒருவர் நடிகர் ராதாரவி மீதும் பாலியல் புகார் வெளியிட்டுள்ளார்.

கோப்புப்படம்



தனுஸ்ரீ தத்தாவின் துனிகர செயலுக்கு பின் சினி உலகத்தில் தொடர் வெடிகுண்டுகள் வெடித்துக்கொண்டே வருகிறது. மக்களிடையே #metoo மீடூ என்ற குறியீட்டு சொல்லை பயன்படுத்தி தங்களின் கசப்பு அனுபவங்களை பகிரும் செயலும் அதிகரித்து வருகிறது.


இந்த தொடக்கத்தினால், நடிகைகள், திரைபிரபலங்கள் என அனைவரும் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதில், நினைத்து பார்க்க முடியாத விதத்தில் உச்சத்தில் இருக்கும் பாலிவுட் பிரபலங்கள் தொடர்பாக பாலியல் புகார்கள் பல வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வரிசையில், பாடலாசிரியர் மற்றும் கவிஞரான வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார் ஒன்று வந்ததாக பாடகி சின்மயி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவு சக டுவிட்டர் வாசிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் சின்மயியை விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சாடியே வந்தனர். இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு தேடும் பெண்கள் பலர் தங்களின் பிரபலங்களுடனான கசப்பான அனுபவங்களை இணையத்தில் பகிர தொடங்கியுள்ளனர்.

இதில் அதிர்ச்சி தரும் விதமாக வைரமுத்துவின் மீது, வேலை வாய்ப்புக்காக வரும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்டதாக அடுத்தடுத்து பாலியல் புகார் வந்துச்சேர துவங்கிவிட்டது.

ஒரு பெண் 'வைரமுத்துவிற்கு சொந்தமான ஹாஸ்டலில் தான் தங்கியிருந்தேன். அப்போது அவர் என்னிடம் அத்துமீறீ நடந்துக்கொண்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிலர், புகார் பதிவுகளை சின்மயியையும் டாக் செய்து பதிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். பின் அவைகளை சின்மயி ரீடுவிட்டும் செய்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், மற்றொருப்பெண் தன்னிடம் பிரபல நடிகர் ராதாரவி தவறாக நடந்துக்கொண்டார் எனவும் பகிர் தகவல் வெளிட்டுள்ளார்.

மேலும் அப்பெண், ' நடிகர் ராதாரவியை வேலை விஷயமாக சந்திக்க சென்றிருந்தேன். அப்போது அவர் என்னை கட்டி அணைத்து முகத்தில் முத்தமிட்டார். மேலும் வேலையை நன்றாக செய் என்றும் பார்க்க நான் நல்லா இருக்கிறேன் என்றும் கூறினார். பின் நான் அந்த வேலையையே விட்டுவிட்டேன். அவருக்கும் செல்வாக்கு இருப்பதினால் அப்போது நான் வெளியே சொல்லி இருந்தாலும் பயன்பெற்றிருக்காது.' என தெரிவித்திருந்தார்.









CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்