• A
  • A
  • A
பிரபல பாடலாசிரியர் மீது சின்மயி குற்றச்சாட்டு!

கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக இளம்பெண் ஒருவர் பகிர்ந்த தகவலை பாடகி சின்மயி தன்னுடைய டூவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்



சினிமா துறையில் பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருவதாக பலர் புகார் கூறி வருகின்றனர். நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ பாலியல் புகார் தெரிவித்தார்.


இதையடுத்து மீ டூ என்ற ஹேஸ்டாக்கை பயன்படுத்தி பலரும் தங்களது நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். சிறு வயதில் தானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என்று தனது கதையை டுவிட்டரில் பகிர்ந்தார் பாடகி சின்மயி.

இந்நிலையில் பெண்மணி ஒருவர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக பதிவிட்டுள்ளார். இதில், எனக்கு 18 வயது இருக்கும். வைரமுத்து அவர்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவர் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன்.

அப்பொழுது ஒரு நாள் பாடல் வரிகளை பற்றி விளக்கம் தந்துக் கொண்டிருந்தேன். திடீரென என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே அந்த இடத்திலிருந்து ஓடி வந்துவிட்டேன், என்று அவரது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.

இதை சின்மயி, அவரது டுவிட்டர் பக்கத்தில் ரீ டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து ஒருவர் நீங்கள் எப்படி இதை உண்மை என்று சொல்லலாம். யாரோ உங்களுக்கு மெசேஜ் செய்திருந்தால் அதை உண்மை என்று நம்புவதா. பொய்யாக கூட இருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இது பொய் அல்ல நிஜம் தான் என்று பதிலளித்துள்ளார் சின்மயி.



இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் மீது வந்துள்ள இந்த பகீர் புகார் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்